Sunday, November 8, 2020

மனப்பயணம்

 

ஒற்றையடி பாதை..

தண்டவாளத்திற்கு இணையாக

விரிந்தோடும் பல்விருகத்தின் ஊடாய்

தொடரிசைக்கு ஆடி

புனலிற் குழைந்து

மணலிற் காய்ந்து

பணிப்புலம் சேர்ந்தவனை

வீட்டில் கொண்டு விட்டது .

Monday, July 19, 2010

தேசம்

தலையை புறமிழுத்து
காற்றை  உள் வாங்கினான்
கயத்தாறை கடந்தது வண்டி.

பசித்திருந்தவை

சுண்டிய மடுவுடன்
காகிதம் தின்றது
மாலையிலாவது பால்தர
கன்றுக்கு.

நிர்வாண ஓவியத்தில்
பிரகாசமாய் அவள் முகம்
அன்று அவள் வீட்டில்
அடுபெரிந்திருக்கும் .

டை பார்த்தான்
பார்வையற்றவரிடம்
தினமும்.

தெய்வங்கள்

தனித்த நள்ளிரவில்
நெடிய ஒருவழியில்
சோகங்களின் உடனிருப்பில்
உம் அகம் பிரித்தீர்
நான் யாரிடம் .... ?

Wednesday, May 26, 2010

தனித்திருந்தவை

னதில் நீ
தெருவெங்கும் பூந்தோட்டம்


ன்மீது வடியும் என் அன்பின் எச்சம்
உலகத்தை நிறைக்கிறது



பிற காதல் இணைகளின்
கண் நம்மீது படக்கூடும்
எச்சரிக்கை



தூரமும் காலமும்
செய்யும் சதி கரைகிறது
நம் தொலைஉணர்வில்




பேசும் நேரத்திலும்
பேசா தனிமை இனியது
நம் வசந்தத்தின் அசைபோடல்


ன்ன நடனம்
என் இதய துடிப்புக்கு
உன் இமைகள் செய்வது .


காற்றை கையடக்கி
காண்பவரை மடமாக்கும்
தேன்கிண்ண குழந்தை
இன்று நீஎனக்கு.


நான் உன்னை கண்டபின்
காதலனது
என் பேனாவுக்கும்
காகிதத்திற்கும்.

Friday, May 14, 2010

உன் கோபம்

என்
முன்னாள் காதலி பற்றி
இனி பேசுவதில்லை
கொஞ்சம் சிரி

முகமூடி

உன்  முகம்
கண்ட
உலக அழகிகள்
அணிவதற்காக