Thursday, October 22, 2009

தவம்

ஆடிக் கொண்டிருந்த
இதயக்கதவு வழி நுழைந்தது ...
இள்கிய இடுக்குகளில்
வேர் விட்டு
இதய இரத்தம் பருகி
வளர்ந்தது ..
சூழலின் வெம்மையில்
கவிதை ஒளியில்
மின்னித் துளிர்விட்டது ...
உன் எதிர்ப் படலில்
வானைத் தேடியது ..
உனது முதல் பார்வையில்
ஆயிரம் கிளைகளை விரித்து ...
குறி்ஞ்சியாய் இன்னமும் ...
பூக்கக் காத்திருந்தது ...

5 comments:

சத்ரியன் said...

//உன் எதிர்ப் படலில்
வானைத் தேடியது ..//

ராம்,

சிறப்பு ...!

க.பாலாசி said...

//சூழலின் வெம்மையில்
கவிதை ஒளியில்
மின்னித் துளிர்விட்டது ..//

மிக அழகான ஆழமான வரிகள் அன்பரே...தொடர்ந்து எழுதுங்கள்...

RamG said...

நன்றி சத்ரியன்

RamG said...

தொடர்ந்து எழுதுவது தான் திட்டம் ... பார்போம்

நன்றி பாலாசி

அன்புடன் நான் said...

நல்லாயிருக்குங்க தொடர்ந்து எழுதுங்க... பாராட்டுக்கள்.

Post a Comment