தமிழர் சாவதை
தமிழகம் நோக்கி-
இருந்தது கண்டு
கவிதை இறந்தது
மானுடம் புதைபட
இந்தியம் மண் அணைத்தபோது
கவிதை இறந்தது
கண்ணீரின் வரிகள்
இரத்தத்தில் மறைவதை
கடவுளர் காணாத போது
கவிதை இறந்தது
Thursday, January 14, 2010
Saturday, January 9, 2010
நினைவோடை
அன்று
கன்னம் வழிந்தோடும்
கண்ணீரை துடைக்க கைகள் அற்று
இருந்த போது ...
காற்றின் கைகளோடு உன் நினைவு
உடனிருந்தது
தரைக்கு மேலே அனைத்தும்
காய்ந்த நிலையிலும்
வேரின் ஈர உயிர்ப்பாய்
உன் நினைவு
மட்டும்
கன்னம் வழிந்தோடும்
கண்ணீரை துடைக்க கைகள் அற்று
இருந்த போது ...
காற்றின் கைகளோடு உன் நினைவு
உடனிருந்தது
தரைக்கு மேலே அனைத்தும்
காய்ந்த நிலையிலும்
வேரின் ஈர உயிர்ப்பாய்
உன் நினைவு
மட்டும்
Subscribe to:
Posts (Atom)
