Monday, July 19, 2010

தேசம்

தலையை புறமிழுத்து
காற்றை  உள் வாங்கினான்
கயத்தாறை கடந்தது வண்டி.

பசித்திருந்தவை

சுண்டிய மடுவுடன்
காகிதம் தின்றது
மாலையிலாவது பால்தர
கன்றுக்கு.

நிர்வாண ஓவியத்தில்
பிரகாசமாய் அவள் முகம்
அன்று அவள் வீட்டில்
அடுபெரிந்திருக்கும் .

டை பார்த்தான்
பார்வையற்றவரிடம்
தினமும்.

தெய்வங்கள்

தனித்த நள்ளிரவில்
நெடிய ஒருவழியில்
சோகங்களின் உடனிருப்பில்
உம் அகம் பிரித்தீர்
நான் யாரிடம் .... ?