தெருவெங்கும் பூந்தோட்டம்
உன்மீது வடியும் என் அன்பின் எச்சம்
உலகத்தை நிறைக்கிறது
பிற காதல் இணைகளின்
கண் நம்மீது படக்கூடும்
எச்சரிக்கை
தூரமும் காலமும்
செய்யும் சதி கரைகிறது
நம் தொலைஉணர்வில்
பேசும் நேரத்திலும்
பேசா தனிமை இனியது
நம் வசந்தத்தின் அசைபோடல்
என்ன நடனம்
என் இதய துடிப்புக்கு
உன் இமைகள் செய்வது .
காற்றை கையடக்கி
காண்பவரை மடமாக்கும்
தேன்கிண்ண குழந்தை
இன்று நீஎனக்கு.
நான் உன்னை கண்டபின்
காதலனது
என் பேனாவுக்கும்
காகிதத்திற்கும்.